ETV Bharat / sports

வீழ்ந்தாலும் எழுவோம்... காயம் குறித்து ஷிகர் தவான் - காயம் குறித்து ஷிகர் தவான் ட்வீட்

கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

dhawan
author img

By

Published : Nov 21, 2019, 5:50 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். அவர் அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 91 ரன்களைக் குவித்தார். அதன்பின் இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்தார்.

இதனிடையே ஷிகர் தவானின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஷிகர் தவான் மருத்துவமனை ஊழியர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் அவர், ‘கிரிக்கெட் வீரர்கள் வீழ்வோம் ஆனால் மீண்டும் எழுவோம். காயம் ஆறிய பின் அதிலிருந்து மீள்வோம். எந்த மாதிரியான சூழ்நிலைகள் வந்தாலும் நீங்கள் எப்படி அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை பொறுத்தே அனைத்தும் உள்ளது.

dhawan
தவானின் ட்வீட்

எனவே வாழ்க்கை உங்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் மகிழ்ச்சியுடன் கடந்து செல்ல வேண்டும். நான் இன்னும் ஐந்து தினங்களில் குணமாகி மீண்டும் விளையாட ஆரம்பிப்பேன்’ என பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிட்டள்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், காயமடையும் விஷயத்தையும் ஒரு கலகலப்பான அனுபவமாக மாற்றும் திறமை தவானுக்கே உள்ளது. நீங்கள் சீக்கிரமாக குணமடையுங்கள் என பதிவிட்டிருந்தது.

dhawan
தவானின் ட்வீட்டிற்கு மறுபதிவிட்ட டெல்லி அணி

அடுத்ததாக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20, ஒருநாள் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று மாலை அறிவிக்கவுள்ளனர். இதில் காயம் காரணமாக ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.