கரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் குடும்பத்தாருடனும், சமூக வலைத்தளங்களிலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குடன் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணலில் இணைந்தார்.
அப்போது யுவராஜ் சிங் பும்ராவிடம், உங்களது பேட்டிங்கில் நீங்கள் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் என்றால், ஒருநாள் போட்டியில் 10 ரன்கள், டெஸ்டில் 10 ரன்கள், ஐபிஎல் தொடரில் 16 ரன்களை எடுத்துள்ளீர்கள். மேலும் 80 முதல் தர போட்டிகளில் விளையாடி 82 ரன்களை எடுத்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் யுவராஜ் சிங்கின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பும்ரா, கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரின் போது தனது அதிரடி பேட்டிங்கால் கோவா அணியை வீழ்த்திய ஆட்டத்தின் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
-
On popular demand (mostly by @YUVSTRONG12), here’s presenting, Jasprit Bumrah’s match winning knock of 2017! pic.twitter.com/gnaSrZUOWn
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) April 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On popular demand (mostly by @YUVSTRONG12), here’s presenting, Jasprit Bumrah’s match winning knock of 2017! pic.twitter.com/gnaSrZUOWn
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) April 28, 2020On popular demand (mostly by @YUVSTRONG12), here’s presenting, Jasprit Bumrah’s match winning knock of 2017! pic.twitter.com/gnaSrZUOWn
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) April 28, 2020
மேலும் அவர் தனது பதிவில், “இந்த காணொலி யுவாராஜ் சிங்கின் வேண்டுகோளுக்கு இணங்க. மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா போட்டியை வெற்றிப் பெறச்செய்த ஒரு பேட்டிங்” என்று பதிவிட்டிருந்தார். அவர் அப்போட்டியில் 20 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்களை எடுத்தது அக்காணொலியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யார்க்ஷயர் அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அஸ்வின்!