பாலிவுட் திரைப்பட பாடல்களுக்கு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் நடனமாடுவது வழக்கமாகிவிட்டது. அந்தவகையில், பிரபல இந்தி ரீ-மிக்ஸ் பாடலான 'ஜியா ஹோ ஜியா குச் போல் டோ' என்ற பாடலுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் நடனமாடியுள்ளார்.
-
Sir Gary Sobers dancing in an Indian wedding in Barbados. Over 80 plus in age his sense of rhythm is admirable. The great cricketer pic.twitter.com/EWWDcpWoSU
— Aviator Anil Chopra (@Chopsyturvey) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sir Gary Sobers dancing in an Indian wedding in Barbados. Over 80 plus in age his sense of rhythm is admirable. The great cricketer pic.twitter.com/EWWDcpWoSU
— Aviator Anil Chopra (@Chopsyturvey) February 21, 2020Sir Gary Sobers dancing in an Indian wedding in Barbados. Over 80 plus in age his sense of rhythm is admirable. The great cricketer pic.twitter.com/EWWDcpWoSU
— Aviator Anil Chopra (@Chopsyturvey) February 21, 2020
பார்படோஸில் நடைபெற்ற இந்திய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனது நடனத் திறனையும் வெளிப்படுத்தியது காண்போரைக் கவர்ந்துள்ளது. இந்தக் காணொலியை அவியேட்டர் அனில் சோப்ரா என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 83 வயதிலும் கேரி சோபர்ஸ் ஆடிய நடனத்தை இதுவரை ட்விட்டரில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் இரண்டு இரட்டை சதங்கள், 26 சதங்கள், 30 அரைசதங்கள் உள்பட எட்டாயிரத்து 32 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல பந்துவீச்சில் ஆறுமுறை ஐந்து விக்கெட்டுகள் உள்பட 235 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜாம்பவான்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் 'கடைசி தலைமுறை ஃபாஸ்ட் பவுலர் கர்ட்லி அம்ப்ரோஸ்'