கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பாலுடன் ஃபேஸ்புக் நேரலையில் இணைந்து உரையாற்றினர். அப்போது தமிம், கோலியிடம் கடந்த சில ஆண்டுகளாக உங்களது பேட்டிங் நிலைபாடு சற்று முன்னும் பின்னுமாக உள்ளதே? என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கோலி, “நான் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கான காரணம், அனைத்து மைதானங்களிலும் நான் ரன்களை குவிக்க விரும்பினேன். ஆனால் அது எனக்கு சரியாக அமையவில்லை. மேலும் சச்சின் டெண்டுல்கரைப் போன்ற நிறைய பேர் இதனைச் செய்துள்ளனர். பயிற்சியின்போது நாம் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும், மைதானத்தில் அதனை வெளிப்படுத்தினால் மட்டுமே உங்களது நம்பிக்கை உயரும்.
ஒவ்வொரு முறை நான் மைதானத்தில் களமிறங்கும் போதும் எனது நம்பிக்கையை கைவிடாமல், விளையாடி வருகிறேன். அதன் காரணமாகவே என்னால் ரன்களை குவிக்க இயல்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு!