யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் அக்பர் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.
இந்தப் போட்டியில், கடந்தப் போட்டியில் ஆடிய அதே அணியுடன் இந்திய அணி களமிறங்குகிறது. வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் முராடிற்குப் பதிலாக அவிஷேக் களமிறங்கியுள்ளார்.
இதுவரை நான்கு முறை யு - 19 உலகக்கோப்பையைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஐந்தாவது முறையாக வங்கதேசத்தை வீழ்த்திக் கோப்பையைக் கைப்பற்றுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: ப்ரியம் கார்க் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஷ்வால், திவ்யன்ஷ் சக்சேனா, திலக் வர்மா, துருவ் ஜுரல், சித்தேஷ் வீர், அதர்வா, ரவி பிஷ்னோய், ராவத், கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங்.
வங்கதேச அணி விவரம்: அக்பர் அலி (கேப்டன்), பர்வேஸ் ஜொசைன், ஹசன், மஹ்மதுல் ஹசன் ஜாய், ஹிரிதோய், சஹாதத் ஹொசைன், அவிஷேக் தாஸ், ஷமீம் ஹொசைன், ரகிபுல் ஹசன், இஸ்லாம், தன்சிம் ஹசன்.