பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் பாகிஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. மேலும் இப்போட்டியின் நடுவராக பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் பங்கேற்றார்.
இதன்மூலம் அலீம் தார் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கள நடுவராக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் ரூடி கோர்ட்சென் 209 ஒருநாள் போட்டிகளில் நடுவராக பங்கேற்றதே சாதனையாக இருந்தது. ஆனால் அலீம் தார், 210 போட்டிகளில் கள நடுவராக இருந்து அச்சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும் ரோஹித்!