டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈட்டுபட்டதாக அந்த அணியின் பேட்ஸ்மேன் ஷைமன் அன்வர், பந்துவீச்சாளர் கதீர் அகமது ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்தது.
அந்த சூதாட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டனான முகமது நவீத்தையும் அந்த அணியிலிருந்து நீக்கி ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் முகமது நவீத் 12 குற்றங்களையும், மற்ற இரு வீரர்கள் ஆறு குற்றங்களையும் செய்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வருகிற அக்டோபர் 30ஆம் தேதிக்குள் குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் பதிலளிக்கவும் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.
-
ICYMI: https://t.co/yX7nB3MccI
— ICC (@ICC) October 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ICYMI: https://t.co/yX7nB3MccI
— ICC (@ICC) October 16, 2019ICYMI: https://t.co/yX7nB3MccI
— ICC (@ICC) October 16, 2019
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அணியின் கேப்டன் உள்பட மூன்று வீரர்களை ஐசிசி தடை செய்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #TNPL2019: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விசாரணைக் குழு அறிக்கை!