ETV Bharat / sports

ஐசிசிக்கு ட்விட்டரில் குறுந்தகவல் அனுப்பிய விம்பிள்டன் - குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்! - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ட்விட்டர் பக்கமான ஐசிசியும் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் ட்விட்டர் பக்கமும் இணைந்து புதிர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ICC and Wimbledon
ICC and Wimbledon
author img

By

Published : Dec 13, 2019, 10:06 PM IST

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்துவிதமான முடிவுகளையும் எடுக்கும் தலைமையான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், டென்னிஸ் தொடர்களில் புகழ்பெற்ற விம்பிள்டன் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து ட்விட்டர் பக்கத்தில் புதிரொன்றை போட்டுள்ளன.

இந்த இரு அமைப்புகளின் ட்விட்டர் பக்கங்களிலும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் காணொலியில் இரு ட்விட்டர் பக்கங்களும் தங்களது கருத்துகளைப் பறிமாறுவது போன்று அமைந்துள்ளது. அதன்பிறகு முடிவில் ’ஒன் டே ஆன் ஜூலை’ என பதிவிட்டு ’கம்மிங் சூன்’ என முடிந்துள்ளது.

இதனைக்கண்ட கிரிக்கெட், டென்னிஸ் ரசிகர்கள் என்னவாக இருக்கும் என மண்டையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துவருகின்றனர். ஆனால் அந்தக் காணொலிக்கான விளக்கம், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியும் இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டனில் ஒரேநாளில் நடைபெற்றது. இந்த இரு போட்டியிலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் முடிவுகள் அமைந்திருந்தது என்பதையே இந்தக் காணொலி குறிப்பிட்டுள்ளது.

தற்போது இந்தக் காணொலியானது ட்விட்டரில் ட்ரெண்டாகிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உலகக்கோப்பை நாயகர்களை ஒருநாள் அணியிலிருந்து விலக்கிய இங்கிலாந்து! காரணம் இதுதான்!

Intro:Body:

wimbledon colllaporation with icc puzzle

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.