ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று கலக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தங்கராசு, ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் வலைபயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்றார்.
பின்னர் இந்திய வீரர்களின் அடுத்தடுத்த காயங்கள் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள், டி20,டெஸ்ட் ஆகிய 3 வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின், இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களுக்காக நடராஜனை தேர்வு செய்யவுள்ளதால், இந்தாண்டு நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமென பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஒருநாள், டி20 தொடரில் நடராஜனுக்கு இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி கூறுகையில் “ இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் நடராஜன் விளையாடுவார் என்பதால் பிசிசிஐயும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் எங்களிடம், நடராஜனை தமிழ்நாடு அணி விடுவிக்க வேண்டும் என கேட்டனர்.
இதையடுத்து, விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு அணியிலிருந்து நடரஜான் விடுவிக்கப்பட்டார். நடராஜனுக்கு பதிலாக ஆர்.எஸ். ஜெகநாத் தமிழ்நாடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்” என தெரிவி்த்தார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?