இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த வெள்ளிக்கிழமை முதல் எனது வீட்டில் திருட திருடர்கள் மூன்று முறை முயற்சித்துள்ளனர். நேற்று இரவு எனது நண்பரின் காரை இவர்கள் உடைத்துள்ளனர்.
இன்று எனது வீட்டை மூன்றாவது முறையாக திருட முயற்சித்தபோது வீட்டில் தனியாக இருந்த எனது தாய் பயந்துள்ளார். கரோனா வைரஸால் மக்கள் இதுபோன்ற விரக்தியில் தள்ளப்படுகின்றனர். எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என பதிவிட்டிருந்தார்.