இந்தியா முழுவதும் நேற்று குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. அதனால் பலரும் தங்கள் வாழ்வின் வழிகாட்டிகள், ஆசிரியர்கள், தங்களது வெற்றிக்கு காரணமானவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், '' நான் எனது பேட்டை கையில் எடுக்கும்போது மூன்று பேர் நினைவுக்கு வருவார்கள். அந்த மூன்று பேரும் எனது வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாக இருந்தவர்கள்.
முதலாவது எனது சகோதரர் அஜித் டெண்டுல்கர். ஒவ்வொரு முறை நான் பேட்டோடு களமிறங்கும்போது அவர் நேரடியாகக் களமிறங்கவில்லை என்றாலும், மனதளவில் என்னுடன் களத்திற்கு வந்தவர். முதன்முதலாக அச்ரேக்கர் சாரிடம் என்னை அழைத்துச் சென்றவர்.
இரண்டாவது எனது ஆசிரியர் ராமகாந்த் அச்ரேக்கர். எனது பேட்டிங்கை மேம்படுத்துவதற்காக தனது எண்ணிலடங்கா நேரத்தை செலவிட்டவர். பேட்டிங்கின் போது செய்த தவறுகளையும், மேம்படுத்த வேண்டிய இடங்களைப் பற்றியும் குறிப்புகள் எடுத்து வைத்து என்னை உருவாக்கியவர். கிரிக்கெட் பற்றி நான் பேசிய அதிகமான நேரங்கள் அவரோடு தான்.
மூன்றாவதாக எனது தந்தை ரமேஷ் டெண்டுல்கர். அவர் எனக்கு சொன்னது, எப்போதும் குறுக்கு வழியிலோ அல்லது வேறு வழியிலோ செல்லாதே! எதற்கும் உன்னை தயார்ப்படுத்திக்கொள். எல்லாவற்றையும் கடந்து உன் மதிப்பை எதற்காகவும் குறைத்துக் கொள்ளாதே.
-
On Guru Purnima, I want to thank all the people who have taught & inspired me to give my best. However, to these three gentlemen I am ever grateful. 🙏🏼#GuruPurnima pic.twitter.com/PB3Oszv97f
— Sachin Tendulkar (@sachin_rt) July 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On Guru Purnima, I want to thank all the people who have taught & inspired me to give my best. However, to these three gentlemen I am ever grateful. 🙏🏼#GuruPurnima pic.twitter.com/PB3Oszv97f
— Sachin Tendulkar (@sachin_rt) July 5, 2020On Guru Purnima, I want to thank all the people who have taught & inspired me to give my best. However, to these three gentlemen I am ever grateful. 🙏🏼#GuruPurnima pic.twitter.com/PB3Oszv97f
— Sachin Tendulkar (@sachin_rt) July 5, 2020
இந்த மூன்று பேரை பற்றி நான் எவ்வளவு பேசினாலும் அது போதாது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மறுசீரமைக்கப்பட்ட மொடீரா மைதானத்தின் புகைப்படத்தை வெளியிட்ட ஜெய் ஷா!