ETV Bharat / sports

டெண்டுல்கர், லாராதான் எனது காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்கள் - வார்னே

தனது சம காலத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸின் பிரயன் லாரா ஆகியோர்தான் சிறந்த பேட்ஸ்மேன்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 30, 2020, 10:48 PM IST

Tendulkar and Lara greatest batsmen of my era: Shane Warne

டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. இவரது பந்துவீச்சுக்கு ஆட்டமிழக்காத பேட்ஸ்மேன்களே இல்லை. ஆஸ்திரேலிய அணிக்காக 1992 முதல் 2007வரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால், இவரது பந்துவீச்சை இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீஸின் பிரயன் லாரா ஆகியோர் போல் வெளுத்து வாங்கிய பேட்ஸ்மேன்கள் இல்லை.

இதனால், 1990, 2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் சச்சின் vs வார்னே, லாரா vs வார்னே என கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 50 வயதான வார்னே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரலையாக பேசிவந்தார். அப்போது எனது சம காலத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா ஆகியோர்தான் சிறந்த பேட்ஸ்மேன்கள் எனத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அனைத்து விதமான தட்பவெட்ப சூழல்களிலும் விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் ஒருவரை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் சச்சின் - லாரா இருவருக்கும் கடும் போட்டி நிலவும். ஆனால் நான் சச்சினைதான் தேர்வு செய்வேன். அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் கடைசி ஒரு நாளில் 400 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்றால் நான் நிச்சயம் லாராவைதான் தேர்வு செய்வேன்" என்றார்.

Tendulkar and Lara
லாரா - சச்சின்

ஷேன் வார்னே கூறியதை போல சச்சின், லாரா ஆகியோர்தான் கிரிக்கெட்டின் மைல்கல் சாதனைகளுக்கு உரிமம் கொண்டாடுகின்றனர். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர், அதிக ரன்கள் குவித்த வீரர், அதிக சதம் அடித்த வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார் என்றால் டெஸ்ட் போட்டிகளில் தனி ஒருவர் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையை லாரா படைத்துள்ளார்.

இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 15,921 ரன்கள் குவித்துள்ளார். மறுமுனையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய லாரா 11, 953 ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: 15 ஆண்டுகளாக உலகை கட்டுப்பாட்டில் வைத்த ஸ்பின் ஜீனியஸ் - #WARNE50

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.