T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி நமிபியா அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்தில் சிறிது தடுமாறியது. இதனால் அந்த அணி 48 ரன்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் ரியன் டென் டெஸ்காடே தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தத் தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டென் டெஸ்காடே 40 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 59 ரன்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்தது. அதன் பின் களமிறங்கிய நமிபியா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
-
A crucial half-century for Ryan ten Doeschate.
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He's really helped his side pick up the scoring rate after being 66/4 in the 13th over. Three overs to go in the Dutch innings. #T20WorldCup | #NEDvNAM | FOLLOW ALL THE ACTION ⬇️ https://t.co/FWKejE836n pic.twitter.com/EwCTF9uT1n
">A crucial half-century for Ryan ten Doeschate.
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2019
He's really helped his side pick up the scoring rate after being 66/4 in the 13th over. Three overs to go in the Dutch innings. #T20WorldCup | #NEDvNAM | FOLLOW ALL THE ACTION ⬇️ https://t.co/FWKejE836n pic.twitter.com/EwCTF9uT1nA crucial half-century for Ryan ten Doeschate.
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2019
He's really helped his side pick up the scoring rate after being 66/4 in the 13th over. Three overs to go in the Dutch innings. #T20WorldCup | #NEDvNAM | FOLLOW ALL THE ACTION ⬇️ https://t.co/FWKejE836n pic.twitter.com/EwCTF9uT1n
அதன் மூலம் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா அணியை வீழ்த்தி டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில், தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
சிறப்பாக விளையாடி நெதர்லாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற, ரியன் டென் டெஸ்காடே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #SultanOfJohorCup: கடைசி நிமிடத்தில் சாம்பியன் பட்டத்தை இழந்த இந்தியா