இந்திய அணி சமீபத்திய ஐசிசி தொடர்களில் அரையிறுதி, இறுதிப் போட்டி ஆகிய தூரம் வரை சென்று தோல்வியடைந்து வெளியேறுகிறது. இதனை விமர்சிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ''ஒரு நல்ல வீரருக்கும், மிகச்சிறந்த வீரருக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை முக்கியமான போட்டிகளின் போது தெரிந்துகொள்ளலாம். மற்ற அணிகள் ப்ரஷரை சமாளிக்கும் அளவிற்கு, இந்திய அணியால் ப்ரஷர் சூழல்களை சமாளிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.
இந்திய அணி பங்கேற்ற அனைத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைப் பார்க்கும்போது இந்திய அணியின் மன உறுதி மற்றும் நம்பிக்கையின் மீது கேள்வி எழுகிறது. நாம் உலக சாம்பியன் ஆகும் அளவிற்கு வீரர்களை தயார் செய்கிறோம். ஆனால் உலக சாம்பியன் பட்டத்தை வென்றால் மட்டுமே நம்மை உலக சாம்பியன் என அழைப்பார்கள்.
லீக் போட்டிகளில் தவறு செய்வதற்கு வாய்ப்பு இருக்கும். ஆனால் நாக் அவுட் போட்டிகளைப் பொறுத்தவரையில் தவறு செய்தால், தொடரிலிருந்து வெளியேற வேண்டியது தான்'' என்றார்.