விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், ஏற்கனவே இந்திய அணி டி20, ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் ஆன்டிகுவாவில் இருக்கும் கடற்கரையில் குதூகலம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், இந்திய அணியின் கேப்டன் கோலி, ரஹானே, ரோகித் ஷர்மா, ரிஷப் பந்த், இஷாந்த் ஷர்மா, மயாங்க் அகர்வால், மேலும் இந்திய கிரிக்கெட் உறுப்பினர்கள் இருந்தனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலி வெளியிட்ட இந்தப் புகைப்படத்துக்கு சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. முன்னதாக, இந்தியா ஏ - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.