ETV Bharat / sports

#INDvSA: இந்தியாவிற்கு எதிராகக் களமிறங்கிய தமிழர்...!

author img

By

Published : Oct 2, 2019, 12:05 PM IST

விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சீனுராம் முத்துசாமி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.

Senuram Muthusamy

பொதுவாக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பலர், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடிவருகின்றனர்.

நாசர் உசைன் (இங்கிலாந்து), வீராசாமி பெருமாள் (வெஸ்ட் இண்டீஸ்), மகேந்திர நாகமுத்து (வெஸ்ட் இண்டீஸ்), முத்தையா முரளிதரன் (இலங்கை), ரசல் அர்னால்டு (இலங்கை) உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் இந்த வரிசையில் இடம்பெற்று இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளனர்.

Senuram Muthusamy
சீனுராம் முத்துசாமி

தற்போது, அவர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். புதுக்கோட்டையை பூர்வீகமாகக்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர் சீனுராம் முத்துசாமி டர்பனில் பிறந்தவர். இடதுகை பேட்ஸ்மேன், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என ஆல்ரவுண்டராக வலம்வரும் 25 வயதான இவர், தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.

Senuram Muthusamy
சீனுராம் முத்துசாமி

தென் ஆப்பிரிக்காவில் 2016-17 சீசனில் நடந்த உள்ளூர் போட்டிகளில், டால்ஃபின்ஸ் அணிக்காக, தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக, நைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 181 ரன்கள் விளாசி அசத்தினார்.

இதுவரை 69 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஏழு சதம், 18 அரைசதம் என 3,403 ரன்கள் அடித்தும் பந்துவீச்சில் 129 விக்கெட்டுகளை கைப்பற்றியும் உள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

சமீபத்தில், இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் தர டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா ஏ அணியில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

India tops in Test standings while SA begins account

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.