ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி: ஆஸி. பேட்டிங்! - இந்திய மகளிர் அணி vs ஆஸ்திரேலிய மகளிர் அணி

இந்திய அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

Womens WorldCup Toss
Womens WorldCup Toss
author img

By

Published : Mar 8, 2020, 12:02 PM IST

Updated : Mar 8, 2020, 12:31 PM IST

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஆறாவது மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மெல்போர்னில் இன்று நடைபெற்று வரும் இறுதி போட்டியில் இந்தியா - நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இதுவரை நடைபெற்ற ஐந்து டி20 உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டிகளில், மூன்றுமுறை சேஸிங் செய்த அணிகளே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது கவனத்திற்குரியது. டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுவது இதுவே முதன்முறை என்பதால், இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை டி20 போட்டிகளில் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 13 முறையும் இந்திய அணி ஆறு முறையும் வென்றுள்ளது. இறுதியாக, இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.

இதனால், மீண்டும் ஒருமுறை இந்த பிரம்மாண்டமான மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைக்குமா அல்லது நான்கு முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி ஐந்தாவது முறையும் கோப்பை வென்று மகளிர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி விவரம்: அலிசா ஹீலே (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ரேச்சல் ஹைன்ஸ், ஆஷ்லி கார்ட்னர், சோபி மொலினெக்ஸ், நிகோலா கெரி, ஜெஸ் ஜோனாசென், ஜார்ஜியா வெர்ஹாம், டேலிசா கம்மின்ஸ், மேகன் ஷட்

இந்திய அணி விவரம்: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தனியா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ், ராஜேஸ்வரி ஜெய்காத்

இதையும் படிங்க: கோப்பையை கைப்பற்றுமா மகளிர் அணி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Last Updated : Mar 8, 2020, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.