இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி பெரும் எதிர்பார்ப்புக்ளை கிளப்பி வருகிறது. இதில் எலைட் குருப் பி பிரிவில் நேற்று (ஜன. 12) நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ்நாடு அணி - அஸ்ஸாம் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். அதன்படி பேட்டிங் செய்ய வந்த அஸ்ஸாம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பிபி தாஸ் 19 ரன்களிலும், கேப்டன் ரிஷவ் தாஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய தினீஷ் தாஸ் 15 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் பொறுப்புடன் விளையாடிய ரியான் பராக் 24 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அஸ்ஸாம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் முகமது, சாய் கிஷோர், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் - ஹரி நிஷாந்த் இணை தொடக்கம் தந்தது. ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் எதிரயின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
-
7⃣8⃣* for N Jagadeesan 👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
4⃣7⃣* for C Hari Nishaanth 👍
1⃣2⃣8⃣*-run stand for the opening wicket 💪
Tamil Nadu seal a clinical 1⃣0⃣-wicket win against Assam. 👏👏#ASMvTN #SyedMushtaqAliT20 | @TNCACricket
Scorecard 👉 https://t.co/B9dpnKpTQa pic.twitter.com/tszjdfpVzu
">7⃣8⃣* for N Jagadeesan 👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 12, 2021
4⃣7⃣* for C Hari Nishaanth 👍
1⃣2⃣8⃣*-run stand for the opening wicket 💪
Tamil Nadu seal a clinical 1⃣0⃣-wicket win against Assam. 👏👏#ASMvTN #SyedMushtaqAliT20 | @TNCACricket
Scorecard 👉 https://t.co/B9dpnKpTQa pic.twitter.com/tszjdfpVzu7⃣8⃣* for N Jagadeesan 👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 12, 2021
4⃣7⃣* for C Hari Nishaanth 👍
1⃣2⃣8⃣*-run stand for the opening wicket 💪
Tamil Nadu seal a clinical 1⃣0⃣-wicket win against Assam. 👏👏#ASMvTN #SyedMushtaqAliT20 | @TNCACricket
Scorecard 👉 https://t.co/B9dpnKpTQa pic.twitter.com/tszjdfpVzu
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் தமிழ்நாடு அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தி அஸ்ஸாமை வீழ்த்தியது.
தமிழ்நாடு அணி தரப்பில் ஜெகதீசன் 50 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 78 ரன்களுடனும், ஹரி நிஷாந்த் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்களையும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையும் படிங்க: IND vs AUS: காயமடைந்த இந்திய வீரர்களின் பட்டியல்!