உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி பெரும் எதிர்பார்ப்புக்ளை கிளப்பி வருகிறது. இதில் எலைட் குருப் இ பிரிவில் நேற்று (ஜன. 13) நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா அணி - மும்பை அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஆதித்யா டாரே இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது.
இதில் ஜெய்ஸ்வால் 40 ரன்களும், ஆதித்யா டாரே 42 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 38 ரன்களை சேர்த்தார்.
அதன்பின் வந்த வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கை களமிறங்கிய கேரளா அணிக்கு முகமது அசாருதீன் - ராபின் உத்தப்பா இணை தொடக்கம் தந்தது. இதில் உத்தப்பா 33 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது அசாருதீன், மும்பை அணி பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
-
💯 in 37 balls! 🔥🔥
— BCCI Domestic (@BCCIdomestic) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sensational stuff this is from Mohammed Azharuddeen. 👍👍
What a knock this has been from the Kerala opener! 👏👏 #KERvMUM #SyedMushtaqAliT20
Follow the match 👉 https://t.co/V6H1Yp60Vs pic.twitter.com/Nrh88uOOFU
">💯 in 37 balls! 🔥🔥
— BCCI Domestic (@BCCIdomestic) January 13, 2021
Sensational stuff this is from Mohammed Azharuddeen. 👍👍
What a knock this has been from the Kerala opener! 👏👏 #KERvMUM #SyedMushtaqAliT20
Follow the match 👉 https://t.co/V6H1Yp60Vs pic.twitter.com/Nrh88uOOFU💯 in 37 balls! 🔥🔥
— BCCI Domestic (@BCCIdomestic) January 13, 2021
Sensational stuff this is from Mohammed Azharuddeen. 👍👍
What a knock this has been from the Kerala opener! 👏👏 #KERvMUM #SyedMushtaqAliT20
Follow the match 👉 https://t.co/V6H1Yp60Vs pic.twitter.com/Nrh88uOOFU
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதமடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் கேரளா அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 15.5 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது.
-
Star of the night - Mohammed Azharuddeen - lit up the Wankhede Stadium with a 54-ball 137* that helped Kerala secure a clinical 8-wicket win over Mumbai.👏👏#KERvMUM #SyedMushtaqAliT20
— BCCI Domestic (@BCCIdomestic) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch how all the action unfolded 🎥👇https://t.co/VWU9MHY0S6 pic.twitter.com/Zr7DgLCYlK
">Star of the night - Mohammed Azharuddeen - lit up the Wankhede Stadium with a 54-ball 137* that helped Kerala secure a clinical 8-wicket win over Mumbai.👏👏#KERvMUM #SyedMushtaqAliT20
— BCCI Domestic (@BCCIdomestic) January 13, 2021
Watch how all the action unfolded 🎥👇https://t.co/VWU9MHY0S6 pic.twitter.com/Zr7DgLCYlKStar of the night - Mohammed Azharuddeen - lit up the Wankhede Stadium with a 54-ball 137* that helped Kerala secure a clinical 8-wicket win over Mumbai.👏👏#KERvMUM #SyedMushtaqAliT20
— BCCI Domestic (@BCCIdomestic) January 13, 2021
Watch how all the action unfolded 🎥👇https://t.co/VWU9MHY0S6 pic.twitter.com/Zr7DgLCYlK
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது அசாருதீன் 54 பந்துகளில் 9 பவுண்டரிகள், 11 சிக்சர்களை விளாசி 137 ரன்களை குவித்தார்.
இதையும் படிங்க: இபிஎல்: புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட்!