ETV Bharat / sports

சுரேஷ் ரெய்னாவின் உறவினர் கொலை! - முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

பஞ்சாப்: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலைசெய்துள்ள சம்பவம் பதான்கோட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suresh Raina's 'relative' killed in attack by robbers, 4 sustain injuries

author img

By

Published : Aug 29, 2020, 10:33 PM IST

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்னை அணியினர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஆக. 28) சென்னை அணியைச் சேர்ந்தவர்களில் சிலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஆக. 29) சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரெய்னாவுக்கு, சென்னை அணி நிர்வாகம் தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சப் பதான்கோட் மாவட்டத்தின் தரியால் கிராமத்தைச் சேர்ந்த ரெய்னாவின் நெருங்கிய உறவினரான அசோக் குமார் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலின்போது அசோக் குமாரின் மனைவி ஆஷா தேவி, அவரது மகன்கள் அபின், குஷால் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பதான்கோட் காவல் துறையினர் கூறுகையில், "கலே கச்சேவாலா கும்பலைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அசோக்குமாரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதையறிந்த அசோக் குமார் அவரைத் தடுக்க முயற்சித்தபோது, தலையில் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது வீட்டிலிருந்த மனைவி, மகன்கள் இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்று தெரிவித்தனர்.

  • Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time.

    KS Viswanathan
    CEO

    — Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் காரணமாகவே சுரேஷ் ரெய்னா, இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதாகத் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பயிற்சிக்குத் திரும்பிய விராட் கோலி அணியினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.