ETV Bharat / sports

என் வழிகாட்டிக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள்: ரெய்னா உருக்கம்!

author img

By

Published : Aug 2, 2020, 2:13 PM IST

தோனி எனக்கு நண்பர் மட்டும் அல்ல. அவர் எனக்கு எப்போதும் ஒரு வழிக்காட்டி என நண்பர்கள் தினத்தன்று தோனியைப் பற்றி சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார்

suresh-raina-hails-mentor-ms-dhoni-on-friendship-day

உலகம் முழுவதும் ஆகஸ்ட் ஞாயிறுக்கிழமைகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தங்களது நண்பர்களுக்கு அனைவரும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக தொடக்கம் முதல் ஆடிவரும் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோரை வைத்து வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்த ரெய்னா, ''இந்த வீடியோவை செய்ததற்காக சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நன்றி. தோனி எப்போதும் எனக்கு நண்பர் மட்டுமல்ல. அவர் எப்போதும் எனக்கு வழிகாட்டியாகவும் உள்ளார். எனது கடினமான நேரங்களில் எப்போதும் என் உடன் இருந்தவர். நன்றி மாகி. நண்பர்கள் தின வாழ்த்துகள். விரைவில் சந்திப்போம்'' என பதிவிட்டுள்ளார்.

Thank you for creating such beautiful memories of us @ChennaiIPL. @msdhoni bhai is not just a friend, he is been my guiding force, my mentor & always been there in the hardest times. Thank you Mahi bhai. Happy #FriendshipDay ! See you soon! https://t.co/BEwogPjD6M

— Suresh Raina🇮🇳 (@ImRaina) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது இந்த வீடியோவும், ரெய்னாவின் ட்வீட்டும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: விரைவில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே!

உலகம் முழுவதும் ஆகஸ்ட் ஞாயிறுக்கிழமைகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தங்களது நண்பர்களுக்கு அனைவரும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக தொடக்கம் முதல் ஆடிவரும் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோரை வைத்து வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்த ரெய்னா, ''இந்த வீடியோவை செய்ததற்காக சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நன்றி. தோனி எப்போதும் எனக்கு நண்பர் மட்டுமல்ல. அவர் எப்போதும் எனக்கு வழிகாட்டியாகவும் உள்ளார். எனது கடினமான நேரங்களில் எப்போதும் என் உடன் இருந்தவர். நன்றி மாகி. நண்பர்கள் தின வாழ்த்துகள். விரைவில் சந்திப்போம்'' என பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோவும், ரெய்னாவின் ட்வீட்டும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: விரைவில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.