இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கட்டாக்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், தற்போதைய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியை பற்றிய தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ' முகமது ஷமியின் பந்துவீச்சு என்னை பிரமிக்க வைக்கின்றது. அவர் எனக்கு வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து ஜாம்பவான் மால்கம் மார்ஷலை நினைவுப்படுத்திவிட்டார். ஏனெனில் இவர்கள் இருவரும் ஓடும் முறையும், பந்துவீசும் முறையும் ஒரு சிறுத்தையைக் கொல்வதற்கான முறை போன்று உள்ளது' என ஷமியை, மார்ஷலுடன் ஒப்பிட்டுப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
நேற்றைய போட்டியில் ஷமி, ரோஸ்டன் சேஸின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் இந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் என்ற சாதனைப் படைத்துள்ளார். இதில் இவர் உலகக்கோப்பை தொடரில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகளும் அடங்கும்.
இதையும் படிங்க: பிக் பேஷ் லீக்: 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற ஸ்கார்ச்சர்ஸ்!