நடந்துமுடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்தது.
இத்தொடரின் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கண்ணாடி அணிந்திருந்தார்.
இதையும் படிங்க:
ஸ்டீவ் ஸ்மித்தை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் - இங்கிலாந்து வீரர்
ஆனால் ரசிகர்கள் அவர் இங்கிலாந்தின் ஜாக் லீச்சை கேலி செய்வதற்காகத்தான் இந்தக் கண்ணாடியை அணிந்துள்ளார் என சர்ச்சையை கிளப்பினர்.
-
An all-time great - and Steve Smith 😉
— England Cricket (@englandcricket) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations on an incredible #Ashes series @stevesmith49. Leachy loves the glasses 🤓 pic.twitter.com/q5mpc8UK1n
">An all-time great - and Steve Smith 😉
— England Cricket (@englandcricket) September 16, 2019
Congratulations on an incredible #Ashes series @stevesmith49. Leachy loves the glasses 🤓 pic.twitter.com/q5mpc8UK1nAn all-time great - and Steve Smith 😉
— England Cricket (@englandcricket) September 16, 2019
Congratulations on an incredible #Ashes series @stevesmith49. Leachy loves the glasses 🤓 pic.twitter.com/q5mpc8UK1n
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ஸ்டீவ் ஸ்மித்தும் ஜாக் லீச்சும் ஐந்தாவது டெஸ்ட் ஆட்டத்தின் முடிவுக்குப் பிறகு ஒரே மாதிரியான கண்ணாடியை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் வாயை அடைத்தனர். இந்தப் புகைப்படத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ’எத்தருணத்திலும் சிறந்த வீரர் - ஸ்டீவ் ஸ்மித்’ என பதிவிட்டு அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தற்போது ஸ்மித்-லீச் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: