கிரிக்கெட் போட்டிகளில் நகைச்சுவை முறையில் வீரர்கள் ஆட்டமிழந்துள்ளதை பார்த்து இருப்போம். ஹிட் விக்கெட், ரன் அவுட், போன்ற சம்பவங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது ஆஸ்திரேலிய வீரர் ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் ஆட்டமிழந்துள்ளது மிகவும் வேடிக்கையாக உள்ளது. நியூ சவுத் வேல்ஸ் - விக்டொரியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த விக்டோரியா அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய நியூ சவுத் வேல்ஸ் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பொதுவாக, இரண்டு பேட்ஸ்மேன்கள் வேறு, வேறு ஸ்ட்ரைக்கில் இருந்தாலே, ரன் ஓடுவதில் குழப்பம் ஏற்படும். ஆனால் நியூ சவுத் வெல்ஸ் அணிக்காக 11வது வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஓ கேஃபீ பை ரன்னருடன் களத்தில் நுழைந்தார்.
எதிர்கொண்ட முதல் பந்தை மிட் விக்கெட் திசையில் தட்டு விட்டு, பை ரன்னர் இருப்பதை தெரியாமல், நான் ஸ்ட்ரைக்கில் ஓட சென்றார் ஸ்டீவ். பின்னர், பை ரன்னர் ஓடி வருவதைத் தெரிந்தப் பிறகு மீண்டும் க்ரீஸுக்கு செல்வதற்காக ஓடினார். ஆனால் அதற்குள் அவரை விக்டொரியா அணியினர் ரன் அவுட் செய்தனர்.
Steve O'Keefe came out to bat with a runner...
— #7Cricket (@7Cricket) March 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Then he forgot he had a runner 🙈#SheffieldShield | #NSWvVIC pic.twitter.com/Uz6BQAki7o
">Steve O'Keefe came out to bat with a runner...
— #7Cricket (@7Cricket) March 13, 2019
Then he forgot he had a runner 🙈#SheffieldShield | #NSWvVIC pic.twitter.com/Uz6BQAki7oSteve O'Keefe came out to bat with a runner...
— #7Cricket (@7Cricket) March 13, 2019
Then he forgot he had a runner 🙈#SheffieldShield | #NSWvVIC pic.twitter.com/Uz6BQAki7o
இந்த வேடிக்கையான ரன் அவுட் வீடியோ இணையளத்தில் வைரலாகி வருகிறது. உள்ளூர் போட்டிகளில் பை ரன்னரை பயன்படுத்துவதற்கு ஐசிசி தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பை ரன்னர் இருந்தாலே குழப்பம் என்பதால்தான் என்னவோ ஐசிசி பை ரன்னர் வைத்து ஓடுவதை தடை செய்தததோ என்னவோ!
இறுதியில் விக்டோரியா அணி இந்தப் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.