இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிவருகிறது. நேற்று முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்திருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் தடுமாறிவருகின்றனர்.
தற்போதுவரை 60 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்து தடுமாறிவருகிறது. இலங்கை அணி சார்பில் கேப்டன் கருணாரத்னே 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி சார்பில் டிரண்ட் போல்ட், டிம் சவுதி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.