இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வேகப்பந்து வீச்சளர் முகமது சிராஜை, சிட்னி மைதானத்திலிருந்த ரசிகர்கள் இன ரீதியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.
இச்சம்பவத்திற்கு இந்தியாவிடம் மன்னிப்பு கோருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது. மேலும், இதுகுறித்து நியூ சௌத் வேல்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவத்திற்கு இந்திய அணி வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் என பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதில் மைதானத்தில் இனவெறி பாகுபாட்டை வெளிப்படுத்திய ரசிகர்களின் செயல் ஏற்கதக்கதல்ல என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதுகுறித்து வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "முகமது சிராஜ், இந்திய அணியிடம் இனவெறி பாகுபாட்டை வெளிப்படுத்திய ரசிகர்களுக்காக மன்னிக்கவும். இனவெறி பாகுபாடு என்பது எந்த வகையிலும், எந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாது. அதுவும் ஆஸ்திரேலிய மைதானத்தில் ரசிகர்கள் இச்செயல் ஏற்கத்தக்கதல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரிஸ்பேன் டெஸ்ட்டிலிருந்து விலகினார் ஜடேஜா!