இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இப்போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கிலும் அதிகப்படியான ரசிகர்களைக் கவரும் விதமாகவும் பல்வேறு முயற்சிகளை பிசிசிஐ எடுத்தது. அதன்படி இப்போட்டிக்கு அரசியல் பிரபலங்களுக்கும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியின் தொடக்க விழாவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வந்திருந்தனர். மேலும் இந்தியா வங்கதேச அணிகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வந்திருந்தனர்.
இப்போட்டியின் இடைவேளையின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், லக்ஷ்மன், கும்ளே, ஆகியோருடன் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் தங்களின் கிரிக்கெட் பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூர்ந்தனர்.
இதனிடையே ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ஈடன் கார்டனில் தனக்கு பிடித்தமான பல நினைவுகள் உள்ளது. அந்த நினைவுகளை அதே இடத்தில் இன்று நினைவுகூர்வதை நம்ப முடியலில்லை என பதிவிட்டிருந்தார்.
-
Some of my favourite cricket memories have come at the Eden Gardens - Today, to relive them on the same turf was unbelievable .. @sachin_rt @VVSLaxman281 @anilkumble1074 thanks @StarSportsIndia and our very own @jatinsapru @Sanjog_G pic.twitter.com/xpwlQx3Hir
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Some of my favourite cricket memories have come at the Eden Gardens - Today, to relive them on the same turf was unbelievable .. @sachin_rt @VVSLaxman281 @anilkumble1074 thanks @StarSportsIndia and our very own @jatinsapru @Sanjog_G pic.twitter.com/xpwlQx3Hir
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 22, 2019Some of my favourite cricket memories have come at the Eden Gardens - Today, to relive them on the same turf was unbelievable .. @sachin_rt @VVSLaxman281 @anilkumble1074 thanks @StarSportsIndia and our very own @jatinsapru @Sanjog_G pic.twitter.com/xpwlQx3Hir
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 22, 2019
முன்னதாக கடந்த 2001ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வரலாறு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.