இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கண்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் ஏழு ரன்கள் தேவைப்பட்டன.
அப்போது இலங்கை வீரர் ஹசரங்கா வீசிய முதல் பந்தில் நியூசிலாந்து வீரர் டாம் ப்ரூஸ் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, டரில் மிட்சல் லஹிரூ மதுஷங்காவிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். இதனால், நியூசிலாந்து அணிக்கு நான்கு பந்தில் ஆறு ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
-
Injury Update: Mendis and Jayasuriya are unlikely to feature in 3rd T20I - https://t.co/inKzUGYdrS#SLvNZ
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Injury Update: Mendis and Jayasuriya are unlikely to feature in 3rd T20I - https://t.co/inKzUGYdrS#SLvNZ
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 4, 2019Injury Update: Mendis and Jayasuriya are unlikely to feature in 3rd T20I - https://t.co/inKzUGYdrS#SLvNZ
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 4, 2019
பின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட மிட்சல் சான்ட்னர் லாங் ஆன் திசை நோக்கி அடித்தார். அதை கேட்ச் பிடிக்க இலங்கை வீரர் சினேகன் ஜெயசூர்யாவும், குசால் மெண்டிஸும் முயற்சிசெய்தனர். இறுதியில் சினேகன் ஜெயசூர்யா பந்தை பிடித்தபோது இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதனால், சினேகன் ஜெயசூர்யா பந்தை பிடித்தபடி பவுண்ட்ரி எல்லையை மிதித்துவிட்டதால், நடுவர் சிக்சர் வழங்கினார்.
இது ஆட்டத்தின் போக்கை நியூசிலாந்து பக்கம் மாற்றியது. இந்நிலையில், ஃபீல்டிங் ஆர்வத்தில் ஜெயசூர்யா, குசால் மெண்டிஸ் இருவரும் மோதிக்கொண்டதால் அவர்களது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை மறுநாள் (செப்டம்பர் 6)ஆம் தேதி நடைபெறும் கடைசி டி20யில் இவர்கள் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.