ETV Bharat / sports

‘வணக்கண்டா மாப்ள, சேலத்துல இருந்து’ - அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிட்ட சேலம் ஸ்பார்டன்ஸ்!

author img

By

Published : May 20, 2020, 11:58 AM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் அணிகளின் ஒன்றான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ கீதம்/ தீம் பாடலை (official anthem/theme song) வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

Salem Spartans released team official Anthem/Theme song

மினி ஐபிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் இந்தாண்டு ஜூன் மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், டிஎன்பிஎல் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, காஞ்சிபுரம் என எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் நடப்பு சீசனில் இரண்டு மிகப்பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில், மிக முக்கிய மாற்றமாக கருதப்படுவது டிஎன்பிஎல் தொடக்க சீசனில் கோப்பையை கைப்பற்றிய டூட்டி பேட்ரியட்ஸ் அணியும், காரைக்குடி காளைஸ் அணியும் இந்தாண்டுக்கான சீசனிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் என்ற இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிதாக இணைந்துள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணி சமூக வலைதளங்களில் தங்களது அதிகாரப்பூர்வ கீதம்/ தீம் பாடலை வெளியிட்டு சேலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. அதன்படி, ‘வணக்கண்டா மாப்ள, சேலத்துல இருந்து’ என்று தொடங்கும் அப்பாடலை சேலம் ஸ்பார்டன்ஸ் அணி தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளது.

Vanakkam Makkale, here is the official anthem/theme song of Salem Spartans for the Tamil Nadu Premier League. Setting the standards high, we are looking forward to bring more pride and joy to our ooru "Namma Salem". Keep following and supporting us. "Namma Salem. Namma Spartans." pic.twitter.com/saCeLfsTNN

— SALEM SPARTANS (@SpartansSalem) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தாண்டு டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், பெரியசாமி, முருகன் அஸ்வின் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:ஆட்டநாயகன் வார்னர் - 'கிரிக்கெட்டில் மட்டுமல்ல டிக்டாக்கிலும்'

மினி ஐபிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் இந்தாண்டு ஜூன் மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், டிஎன்பிஎல் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, காஞ்சிபுரம் என எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் நடப்பு சீசனில் இரண்டு மிகப்பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில், மிக முக்கிய மாற்றமாக கருதப்படுவது டிஎன்பிஎல் தொடக்க சீசனில் கோப்பையை கைப்பற்றிய டூட்டி பேட்ரியட்ஸ் அணியும், காரைக்குடி காளைஸ் அணியும் இந்தாண்டுக்கான சீசனிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் என்ற இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிதாக இணைந்துள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணி சமூக வலைதளங்களில் தங்களது அதிகாரப்பூர்வ கீதம்/ தீம் பாடலை வெளியிட்டு சேலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. அதன்படி, ‘வணக்கண்டா மாப்ள, சேலத்துல இருந்து’ என்று தொடங்கும் அப்பாடலை சேலம் ஸ்பார்டன்ஸ் அணி தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளது.

  • Vanakkam Makkale, here is the official anthem/theme song of Salem Spartans for the Tamil Nadu Premier League. Setting the standards high, we are looking forward to bring more pride and joy to our ooru "Namma Salem". Keep following and supporting us. "Namma Salem. Namma Spartans." pic.twitter.com/saCeLfsTNN

    — SALEM SPARTANS (@SpartansSalem) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தாண்டு டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், பெரியசாமி, முருகன் அஸ்வின் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:ஆட்டநாயகன் வார்னர் - 'கிரிக்கெட்டில் மட்டுமல்ல டிக்டாக்கிலும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.