ETV Bharat / sports

'ரஃபேல் விமானங்களால் நமது பாதுகாப்புப் படை வலுப்பெறும்' - சச்சின்

author img

By

Published : Jul 31, 2020, 3:14 AM IST

டெல்லி: ஐந்து ரஃபேல் போர் விமானங்களைச் சேர்த்ததன் மூலம் நமது நாட்டின் பாதுகாப்புப் படை மேலும் வலுப்பெறும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Sachin Tendulkar congratulates IAF for adding 'state-of-the-art fighter jet Rafale'

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஃபிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், ஃபிரான்ஸிலிருந்து முதல்கட்டமாக ஐந்து ரஃபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலாவிலுள்ள இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கின. இந்த விமானங்களை விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ். பதெளரியா வரவேற்றார்.

இச்சூழலில், ஐந்து ரஃபேல் போர் விமானங்களை சேர்த்ததன் மூலம் நமது நாட்டின் பாதுகாப்புப் படை மேலும் வலுப்பெறும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ரஃபேல் போர் விமானங்களை நமது பாதுகாப்புப் படையில் சேர்த்ததற்கு இந்திய விமானப் படைக்கு எனது வாழ்த்துக்கள். இதன்மூலம் நமது நாட்டின் பாதுகாப்புப் படை மேலும் வலுப்பெறும்” என்று கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப் படையின் கெளரவ கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.