வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் 284 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்தது. நேற்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஏழாவது ஓவரிலேயே ஜேசன் ராய் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின் பர்ன்ஸ்வுடன் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் அணியை வழிநடத்தி சென்றனர்.
அதன்பின் ரூட் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். நிலைத்து ஆடிய ரோரி பர்ன்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
-
A maiden Test 💯 for Rory Burns!
— ICC (@ICC) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He came into this game under huge pressure, and boy, has he delivered 👏
What. An. Innings.#Ashes pic.twitter.com/11x8yHLo84
">A maiden Test 💯 for Rory Burns!
— ICC (@ICC) August 2, 2019
He came into this game under huge pressure, and boy, has he delivered 👏
What. An. Innings.#Ashes pic.twitter.com/11x8yHLo84A maiden Test 💯 for Rory Burns!
— ICC (@ICC) August 2, 2019
He came into this game under huge pressure, and boy, has he delivered 👏
What. An. Innings.#Ashes pic.twitter.com/11x8yHLo84
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்களுடன், ஆஸ்திரேலியா அணியை விட 17 ரன்கள் முன்னிலை பெற்று களத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும் , பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும், களத்திலூள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஜேம்ஸ் பேட்டின்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.