ஐந்தாவது சீசனுக்கான பி.எஸ்.எல். தொடர் பாகிஸ்தானில் முதல்முறையாக விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக லீக் சுற்றோடு தொடரை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
லீக் சுற்றுகளின் முடிவில் பி.எஸ்.எல். தொடரின் ப்ளே - ஆஃப் சுற்றுக்கு கராச்சி கிங்ஸ், லாகூர் குவாலண்டர்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஷால்மி ஆகிய அணிகள் முன்னேறின.
இந்நிலையில் பி.எஸ்.எல். தொடரின் ப்ளே - ஆஃப் போட்டிகள் நடக்குமா என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வாசிம் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ''நவம்பர் மாதம் ப்ளே - ஆஃப் போட்டிகளை நடத்த வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்கு அணிகளின் உரிமையாளர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிய வேண்டும். அவர்களிடம் ஆலோசனை நடத்தியபின்தான் கூற முடியும்.
ப்ளே - ஆஃப் சுற்றுகள் பி.எஸ்.எல். ஆறாவது சீசனுக்கு முன்பாக நடத்த முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையென்றால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
பி.எஸ்.எல். தொடர் பாதியோடு நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நிச்சயம் இழப்பு ஏற்பட்டதுதான்'' என்றார்.
இதையும் படிங்க: ஐசிசியின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்த ஹிட்மேன்!