இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை பந்துவீச்சாளர் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின். சமீபகாலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற இவரது சுழற்பந்துவீச்சு பக்கபலமாக அமைந்துள்ளது. தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
இதில், இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி மூலம் இரு அணிகளும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக விளையாடவுள்ளன.
இந்தூர் மைதானத்தில் இதற்கான வலைப்பயற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், வலதுகை சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் பந்துவீச்சு பயிற்சியின் போது, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவைப் போல இடதுகையில் பந்துவீசும் வீடியோ இணையதளத்தில் வெளியானது. அதில், அஸ்வின் ஜெயசூர்யாவை போலவே பந்துவீச முயற்சித்தார்.
இந்த நிலையில், நான் இடதுகையில் பந்துவீசும் தரமற்ற வீடியோ இணையதளத்தில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதோ நல்ல குவாலிட்டியில் வீடியோவை பாருங்கள் என அவர் இடதுகையில் பந்துவீசும் நல்ல வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார்பூர்வமாக வெளியிட்டார்.
-
Alright people !! Let’s put an end to this fun you are all having with a poor quality video being circulated on the social media. Here is a good one.😂😂😂✅ pic.twitter.com/LMZZBASTbc
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Alright people !! Let’s put an end to this fun you are all having with a poor quality video being circulated on the social media. Here is a good one.😂😂😂✅ pic.twitter.com/LMZZBASTbc
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 18, 2019Alright people !! Let’s put an end to this fun you are all having with a poor quality video being circulated on the social media. Here is a good one.😂😂😂✅ pic.twitter.com/LMZZBASTbc
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 18, 2019
இடதுகையில் பந்துவீசும் அவரது வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. பந்துவீச்சில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்வது அவருக்கு ஓன்றும் புதிதல்ல. முன்னதாக டி.என்.பி.எல் தொடரில் அவர் பந்துவீசும் முறை பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின்