ஆஸ்திரேலியாவில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. அடிலெயிட் மைதானத்தில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அடிலெயிட் அணி தொடக்க வீரர் ஜேக் வெதர்லாந்து, கேப்டன் அலெக்ஸ் கேரி ஆகியோரது அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. ஜேக் வெதர்லாந்து இப்போட்டியில் 47 பந்துகளில் 10 பவுண்டரி, மூன்று சிக்சர் என 83 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 24 பந்துகளில் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
-
Describe this shot in one word...
— KFC Big Bash League (@BBL) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
We'll start: BONKERS #BBL09 pic.twitter.com/TZLxpnJbTT
">Describe this shot in one word...
— KFC Big Bash League (@BBL) December 23, 2019
We'll start: BONKERS #BBL09 pic.twitter.com/TZLxpnJbTTDescribe this shot in one word...
— KFC Big Bash League (@BBL) December 23, 2019
We'll start: BONKERS #BBL09 pic.twitter.com/TZLxpnJbTT
இதைத்தொடர்ந்து, 199 ரன்கள் இலக்குடன் விளையாடிய பெர்த் அணியில் ஜோஷ் இங்லிஸ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். இவ்விரு வீரர்களும் அடிலெயிட் அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசி துவம்சம் செய்தனர். இவர்களது விக்கெட்டை எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் வீசினார்.
அவரது ஓவரின் இரண்டாவது, மூன்றாவது பந்தை லிவிங்ஸ்டோன் அடுத்தடுத்து சிக்சர் அடிக்க பெர்த் அணியின் ஸ்கோர் 8.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 123 ரன்களை எட்டியது. இதனால், பெர்த் அணியின் வெற்றிக்கு 57 பந்துகளில் 76 ரன்கள் தேவைப்பட்டன. லிவிங்ஸ்டோன் 25 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஏழு சிக்சர் என 69 ரன்களுடனும், மறுமுனையில், இங்லிஸ் 26 பந்துகளில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர் என 50 ரன்கள் எடுத்திருந்தனர்.
-
Zing bails flyin' and the aeroplane returns to Adelaide Oval! ✈ @rashidkhan_19 #BlueEnergy #BBL09 pic.twitter.com/QbvOKt9AYn
— Adelaide Strikers (@StrikersBBL) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Zing bails flyin' and the aeroplane returns to Adelaide Oval! ✈ @rashidkhan_19 #BlueEnergy #BBL09 pic.twitter.com/QbvOKt9AYn
— Adelaide Strikers (@StrikersBBL) December 23, 2019Zing bails flyin' and the aeroplane returns to Adelaide Oval! ✈ @rashidkhan_19 #BlueEnergy #BBL09 pic.twitter.com/QbvOKt9AYn
— Adelaide Strikers (@StrikersBBL) December 23, 2019
இருவரும் செட் பேட்ஸ்மேனாக இருந்ததால், பெர்த் அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்க்கப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் லிவிங்ஸ்டோன் சால்ட்டிம் கேட்ச் தந்து 69 ரன்களில் அவுட்டாக, அதற்கு அடுத்து பந்தில் ஜோஷ் லிங்கிஸ் 50 ரன்களில் ரஷித் கான் பந்துவீச்சில் போல்ட்டானார். இவர்களைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
-
We retain the Jason Gillespie Trophy on home soil! 👌
— Adelaide Strikers (@StrikersBBL) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard 📊: https://t.co/BeEgTJ8ay1 #BlueEnergy #BBL09 pic.twitter.com/B9zxWPvDOe
">We retain the Jason Gillespie Trophy on home soil! 👌
— Adelaide Strikers (@StrikersBBL) December 23, 2019
Scorecard 📊: https://t.co/BeEgTJ8ay1 #BlueEnergy #BBL09 pic.twitter.com/B9zxWPvDOeWe retain the Jason Gillespie Trophy on home soil! 👌
— Adelaide Strikers (@StrikersBBL) December 23, 2019
Scorecard 📊: https://t.co/BeEgTJ8ay1 #BlueEnergy #BBL09 pic.twitter.com/B9zxWPvDOe
இறுதியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 18 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி இப்போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடிலெயிட் அணி தரப்பில் ரஷித் கான் மூன்று, வெஸ் அகார், ஹாரி கான்வே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேக் வெதர்லாந்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
இதையும் படிங்க: 11 சிக்சர்கள்... 35 பந்துகளில் 94 ரன்கள்... பிக் பாஷ் டி20இல் மும்பை வீரர் அதிரடி!