ETV Bharat / sports

செப்டம்பரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா தொடர்?

author img

By

Published : Jul 20, 2020, 5:53 PM IST

வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

proposed-eng-aus-series-to-begin-from-september-4-report

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடருக்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் 4, 6, 8 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளிலும், செப்டம்பர் 10, 12, 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

மேலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விரர்கள் அனைவரும் தனியார் ஜெட் விமானம் மூலம் பணியணிப்பார்கள். இந்த ஆறு போட்டிகளும் சௌதாம்டன், மான்செஸ்டர், ஓல்ட் டிராஃபோர்ட் ஆகிய நகரங்களில் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் 26 பேர் கொண்ட விரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலிலிருந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் விரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.