ETV Bharat / sports

டெஸ்ட்டிற்கு ப்ரித்வி ஷா... ஒருநாள் போட்டிகளுக்கு மயாங்க் அகர்வால்... இந்திய அணியின் புதிய தொடக்கம்!

மும்பை: காயம் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய ரோஹித் சர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளுக்கு ப்ரித்வி ஷாவும், ஒருநாள் போட்டிகளுக்கு மயாங்க் அகர்வாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

prithvi-shaw-replaces-rohit-in-tests-mayank-returns-in-odis

author img

By

Published : Feb 4, 2020, 11:56 AM IST

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதில் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது.

இதற்கிடையே டி20 தொடரின் கடைசிப் போட்டியின்போது ரோஹித் சர்மா காயம் காரணமாக வெளியேறினார். இதைத்தொடர்ந்து நேற்று நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோஹித் சர்மா விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

ஏற்கனவே மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக காயம் ஏற்பட்டதால் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ப்ரித்வி ஷா ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது ரோஹித் சர்மாவுக்கு பதிலாக மயாங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து கே.எல். ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என்பதால், இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால் - ப்ரித்வி ஷா இணை களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மயாங்க் அகர்வால்
மயாங்க் அகர்வால்

மேலும் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக சுப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர் நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரஞ்சி டிராபி போட்டியின்போது காயம் காரணமாக ஓய்வில் இருந்த இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இஷாந்த் சர்மா தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, சுப்மன் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சஹா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா.

இதையும் படிங்க: ‘ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே எனது குறிக்கோள்’ - பி.வி. சிந்து

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.