ETV Bharat / sports

பந்தை சேதப்படுத்தி மாட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு ஸ்டீவ் ஸ்மித் ஆதரவு! - Nicholas pooran gets four match ban for ball tampering

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பூரன் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.

pooran
author img

By

Published : Nov 18, 2019, 8:22 PM IST

ஆப்கானிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நான்கு டி20 போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இச்சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக கடந்தாண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பேன்கிராஃப்டிற்கு ஒன்பது மாதத் தடையும், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இந்த தடையால் மூன்று வீரர்களும் கடுமையான அவமரியாதைகளைச் சந்தித்தனர்.

அவர்கள் தடை முடிந்து அணிக்கு திரும்பிய பின்னும் பல்வேறு கேலிகளுக்கு உள்ளாகினர். எனினும் ஸ்மித், வார்னர் ஆகியோர் தங்களின் பேட் மூலமாக கேலி செய்தோருக்கு பதிலளித்தனர். தடைக்குப்பின் திரும்பிய ஸ்மித் ஆஷஸ் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் வீரராகவும் உள்ளார்.

இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து கருத்து தெரிவித்த ஸ்மித், ‘ஒரே மாதிரியான பிரச்னையை (பந்தை சேதப்படுத்தும் குற்றம்) ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் வெவ்வேறு முறைகளில் கையாளுகின்றனர். நான் தவறு செய்தது என் கண்ணத்தில் நானே அறைந்தது போல் ஆகும். அதிலிருந்து நான் வெளியே வந்துவிட்டேன். தற்போது நான் நிகழ்காலத்திலேயே கவனம் செலுத்திவருகிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் அவரது தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, விரைவில் அதைக் கடந்து வருவார். அவருடன் நான் சில போட்டிகளில் விளையாடியுள்ளேன். அவர் ஒரு சிறந்த வீரர். அவருக்கு ஒருநாள் போட்டிகளில் சிறந்த எதிர்காலம் உள்ளது’ என்றார்.

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரான், இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம், மூன்று அரைசதம் என 535 ரன்களைக் குவித்து 44.58 சராசரி வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.