ETV Bharat / sports

கங்குலியின் சகோதரருக்கு கரோனா டெஸ்ட் நெகட்டிவ்! - ஸ்னேகாசிஷ் கங்குலி

கங்குலியின் சகோதரரான ஸ்னேகாசிஷ் கங்குலிக்கு நடத்தப்பட்ட கரோனா வைரஸ் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

perfectly-healthy-news-about-my-illness-baseless-snehasish-ganguly

author img

By

Published : Jun 20, 2020, 9:22 PM IST

பிசிசிஐ தலைவர் கங்குலியின் சகோதரர் ஸ்னேகாசிஷ் கங்குலி. இவரது மனைவி, மனைவியின் தாயார் ஆகியோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் கங்குலியின் சகோதரரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், கங்குலி சகோதரரின் பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரான இவர், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன். தினமும் அலுவலகம் சென்று வருகிறேன். என்னைப் பற்றி சில தவறான செய்திகள் வெளிவந்தன. தற்போது பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இதற்கு பின் நான் தலைப்புச் செய்திகளில் சிக்கமாட்டேன் என நினைக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'ஐபிஎல் தொடர் நடைபெறுமென கங்குலி கூறியுள்ளது மகிழ்ச்சி' - இர்பான் பதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.