நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கியத் தொடரில் விளையாடவுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் நியூசிலாந்திற்கு சென்ற பாகிஸ்தான் அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் எட்டு வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து தொற்று உறுதிசெய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் நியூசிலாந்து மருத்துவ குழுவின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்தில் பயிற்சி பெற தடைவிதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
இதற்கிடையில் சமீபத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் பயிற்சியை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் தொற்று உறுதிசெய்யப்பட்ட வீரர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியினருக்கான 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் காலம் இன்றோடு முடிவடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி வருகிற டிச.18ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:AUS vs IND : மீண்டும் மிரட்டிய வேட், பவுண்டரிகளை பறக்கவிட்ட மேக்ஸ்வெல்..! இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்கு!