கரோனா அச்சுற்றுத்தல் காரணமாக பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது வைஸின் தாக்கம் குறையத் தொடங்கியதிலிருந்து 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடான தொடரை பாகிஸ்தான் அணி பர்வையாளர்களின்றி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து, பிஎஸ்எல் தொடரின் ஆறாவது சீசன் நாளை (பிப்.20) முதல் தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டியைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்சன் மாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய எஹ்சன் மாணி, 'கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரிலிருந்து 20 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பிளே ஆஃப் சுற்றுகளின் போது அரசின் அனுமதியுடன் பார்வையாளர்களின் எண்ணிகை அதிகரிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஓராண்டிற்கு மேலாக பார்வையாளர்களின்றி விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர்களும், போட்டியைக் காணாமலிருந்த ரசிகர்களும் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: 4ஆவது டெஸ்டிலிருந்து விலகும் சாம் கர்ரன் - காரணம் இதுதான்!