பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மழைக்காரணமாக ஆட்டம் சரியாக நடைபெறாததால் டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இரு அணியைப் பொறுத்தவரையிலும் மாற்றங்கள் உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஷின்வாரி டைபாய்டு காய்ச்சல் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக இன்றைய போட்டியில் யாசிர் ஷா இடம்பிடித்துள்ளார். இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரஜிதா காயம் காரணமாக, இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக லசித் எம்புல்டேனியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
Pakistan win the toss and elect to bat first.#PAKvSL Live: https://t.co/Bhja6pONDW pic.twitter.com/aM8d0rUOc0
— Pakistan Cricket Live (@TheRealPCB_Live) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pakistan win the toss and elect to bat first.#PAKvSL Live: https://t.co/Bhja6pONDW pic.twitter.com/aM8d0rUOc0
— Pakistan Cricket Live (@TheRealPCB_Live) December 19, 2019Pakistan win the toss and elect to bat first.#PAKvSL Live: https://t.co/Bhja6pONDW pic.twitter.com/aM8d0rUOc0
— Pakistan Cricket Live (@TheRealPCB_Live) December 19, 2019
பாகிஸ்தான்: அசார் அலி (கே), ஷான் மசூத், ஆபித் அலி, பாபர் ஆசம், ஹரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக், முகமது ரிஸ்வான், யாசிர் ஷா, முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி
இலங்கை: திமுத் கருணாரத்ன (கே), ஓஷாடா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமல், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, லசித் எம்புல்டேனியா, விஸ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார
இதையும் படிங்க:ஃபிபா தாத்தா மறைவு: 1982 - 2018 வரை உலகக்கோப்பை கால்பந்து தொடருக்குப் பயணித்த ரசிகரின் பயணம்!