ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பாகிஸ்தான் அணியின் நசீம் ஷாவைத்தான். பதினாறே வயதில் பாகிஸ்தானின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள இந்த வேகப்பந்து வீச்சாளர் அனைவரின் கவனத்திற்கும் தற்போது வந்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறுகையில், பாகிஸ்தான் அணி தற்போது ஒரு திடமான(தகடா) பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், நசீம் எப்படிப் பந்துவீச வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார். இந்த வயதில் அவரின் திறனைப் பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெறும் டெஸ்ட்டில் நசீமின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு இது முதல் போட்டி என்பதினால் அவர் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது எனவும், அவரின் மனநிலையைப் பார்க்கும் பொழுது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது எனவும் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆண்ட்ரூவ் ஸ்டிராஸுக்கு முன்பே ஷேன் வார்னேவிடம் பல்ப் வாங்கிய சையத் அன்வர்!