நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எட்டு பேருக்கு கடந்த மாதம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் நியூசிலாந்தில் பயிற்சிபெற அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தடைவிதித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட கரோனா பரிசோதனை முடிவில், அந்த அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பயிற்சிபெற விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் அணியைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட கரோனா பரிசோதனை முடிவில், அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சிபெற விதிக்கப்பட்ட தடையை நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் நீக்கியுள்ளது.
-
The squad will fly to Queenstown, where they will train ahead of the T20 and Test series against the BLACKCAPS. The member of the Pakistan squad who tested positive on Day 6 will remain in managed isolation until departing, negative tests permitting. Part 2/2 #NZvPAK
— BLACKCAPS (@BLACKCAPS) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The squad will fly to Queenstown, where they will train ahead of the T20 and Test series against the BLACKCAPS. The member of the Pakistan squad who tested positive on Day 6 will remain in managed isolation until departing, negative tests permitting. Part 2/2 #NZvPAK
— BLACKCAPS (@BLACKCAPS) December 7, 2020The squad will fly to Queenstown, where they will train ahead of the T20 and Test series against the BLACKCAPS. The member of the Pakistan squad who tested positive on Day 6 will remain in managed isolation until departing, negative tests permitting. Part 2/2 #NZvPAK
— BLACKCAPS (@BLACKCAPS) December 7, 2020
மேலும் நாளைமுதல் பாகிஸ்தான் அணி வீரர்கள் குயின்ஸ்லாந்தில் தங்களது பயிற்சியை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அவர்களின் சோதனை முடிவுகள் வரும்வரை அவர்களது தனிமைப்படுத்துதல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி வருகிற டிசம்பர் 18ஆம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:’தோனியைப் போன்று பாண்டியா ஆட்டத்தை பினீஷ் செய்துவிட்டார்' - ஜஸ்டின் லங்கர்!