ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடன் பேசிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகர், “மூன்று ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 150 ஓவர்களை வீசி, சில விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளேன். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு எவ்வாறு பந்துவீச வேண்டும் என்ற புரிதல் எனக்கு கிடைத்துள்ளது.
ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் எனக்கு கிடைத்த அனுபவம் இந்திய அணிகெதிராக பந்துவீச உதவும் என நம்புகிறேன். மேலும் ஆஸி அணியில் நான் மற்றும் ஸாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளோம். அதனால் இருவரில் யாரேனும் ஒருவர் சொதப்பினாலும், மற்றோருவர் அதனை சரிசெய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா!