ETV Bharat / sports

11 ஆண்டுகளுக்கு முன்பு மொஹாலியில் தீபாவளி கொண்டாடிய கிரிக்கெட் கடவுள்...!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாராவின் சாதனையை இந்திய ஜாம்பவான் சச்சின் முறியடித்து இன்றொடு 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

Sachin
author img

By

Published : Oct 17, 2019, 9:36 PM IST

கிரிக்கெட்டிலிருந்து இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றாலும், இன்றும் அவரது பேட்டிங்கைப் பார்த்தால் பழைய நினைவுகள் எல்லாம் மீண்டும் நியாபகத்துக்குவரும். அதன் ஒருபகுதியாக, 11 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் (அக்.17) ரசிகர்களுக்கு சிறந்த தருணத்தை வழங்கியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2008ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது.

இப்போட்டியில் சச்சின் 15 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கனிந்திருந்தது. 13 ரன்கள் எடுத்திருந்த சச்சின் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீடிலின் பந்துவீச்சை தெர்ட் மென்(Third man side) திசைக்குத் தட்டிவிட்டு மூன்று ரன்கள் ஓட ஒட்டுமொத்த மைதானமே கரகோஷம் எழுப்பியது.

இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த லாராவின் சாதனையை (11593 ரன்கள்) இவர் முறியடித்தார். இதையடுத்து, மொஹாலியில் பட்டாசுகளெல்லாம் வெடிக்கவிட்டு சச்சினின் சாதனை கொண்டாடப்பட்டது.

அப்போது கமெண்ட்ரியில் ரவிசாஸ்திரி, ”Its Diwali at Mohali” எனக் கூறினார். அவர் கூறியதைப் போலவே, சச்சின் மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் தீபாவளி பண்டிகையை மொஹாலியில் கொண்டாடினர். இந்த வரலாற்று நிகழ்வு நடந்து இன்றொடு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிசிசிஐ சச்சினின் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது.

தற்போது இந்த வீடியோவை 90ஸ் கிட்ஸ்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து பழைய நினைவை கொண்டாடிவருகின்றனர். இப்போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் சச்சின் அடித்த ரன்களும் படைத்த சாதனைகளும் ரசிகர்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதையும் படிங்க: இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்க தயாராகும் 90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார்ஸ்!

Intro:Body:

Anil kumble birthday special

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.