டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை மட்டுமே பார்த்துவந்த ரசிகர்களை, கிரிக்கெட்டின் மறு உலகத்திற்கு அழைத்துச் சென்றதுதான் டி20 எனப்படும் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர். டி20 போட்டிகள் வருவதற்கு முன்பாக 50 ஓவர் அல்லது டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் பொறுமைத் தன்மையை ரசித்துவந்த ரசிகர்களுக்கு, வீரர்களின் இன்னொரு முகத்தைக் காட்டசெய்த பெருமை டி20 கிரிக்கெட் போட்டியையே சாரும்.
அந்த வகையில் 2007ஆம் ஆண்டுமுதல் தொடங்கப்பட்ட டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்றளவும் ரசிகர்களின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவாகவே கருதப்பட்டுவருகிறது. இத்தொடரின் முதல் அத்தியாயத்திலேயே கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு, 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நாள்.
டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை என இந்திய அணிக்கு இரு மகுடங்களைச் சூட்டிய தோனியின் தலைமையில், 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி களம் கண்டது. லீக் சுற்றுகளில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, அத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்று கோப்பையை வெல்லும் கனவில் மிதந்தது.
ஆனால் அரையிறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கொடுக்கவிருந்த ஷாக் பற்றி யாரும் நினைத்திருக்க மாட்டோம். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
பின் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா-ரஹானே இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார்.
இதன்மூலம் அவர் அரைசதத்தையும் கடந்தார். இதனால் 17 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. அதன்பிறகுதான் விராட்டின் மறுமுகம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்குத் தெரியவந்தது. ரஸ்ஸல், பிராவோ வீசிய டெத் ஓவர்களுக்கு பவுண்டரிகளால் பதிலளித்தார்.
இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்களைக் குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 47 பந்துகளில் 89 ரன்களை எடுத்திருந்தார்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அதிரடி வீரர்கள் கிறிஸ் கெயில், சாமுல்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் உற்சாகத்தின் எல்லைக்கே சென்ற இந்திய ரசிகர்களுக்கு அப்போது தெரியவில்லை, அவர்களுக்கான அதிர்ச்சி அடுத்தாகக் களமிறங்குகிறதென்று.
ஜான்சன் சார்லஸுடன் ஜோடி சேர்ந்த லெண்டல் சிம்மன்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிக்சர்களாக மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். அதன் விளைவு இருவருமே அரைசதமடித்து அணியின் வெற்றிக்கு நங்கூரமிட்டனர். பின் சார்லஸ் 52 ரன்களில் ஆட்டமிழந்ததால், நிம்மதி பெருமூச்சுவிட்ட ரசிகர்களுக்கு, அடுத்து வருவது புயல் என்று தெரியவில்லை.
சிம்மன்ஸுடன் இணைந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் இந்தியர்களின் கனவுக் கோட்டையை தனது பேட்டால் தகர்த்தெறிவார் என, 99 மீட்டருக்கு சிக்சரைப் பறக்கவிடும்வரை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
இறுதியாக 36 பந்துகளில் 73 ரன்கள் தேவை என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஊக்கமளிக்கும்விதமாக, சிம்மன்ஸ் - ரஸ்ஸல் இணை அதிரடியில் ஒட்டுமொத்த அரங்கத்தை அதிரவைத்தது. இறுதியில் 6 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் கேப்டன் தோனி இறுதி ஓவரை விராட் கோலியை வீசவைத்தார்.
ஆனால் தோனியின் இந்த முடிவுக்கு பதிலளிக்குவிதமாக ரஸ்ஸல் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சரைப் பறக்கவிட்டதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதன்மூலம் அத்தொடரின் இறுதிப்போட்டிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது முறையாக முன்னேறி அசத்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக லிண்டல் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 82 ரன்களையும், ரஸ்சல் 20 பந்துகளில் 43 ரன்களை விளாசி இருந்தனர்.
கெயில், சாமுவேல்ஸ் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுவிடும் என்ற கனவில் தத்தளித்த இந்திய ரசிகர்களை, அதிர்ச்சியின் உச்சத்திற்கே எடுத்துச் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற தினம் இன்று.
-
West Indies needed 73 runs from the last six overs against India #OnThisDay in 2016, in order to secure a spot in the #T20WorldCup final.
— ICC (@ICC) March 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
🎥 Watch how @Russell12A and @54simmo finished it with two balls to spare 👇 pic.twitter.com/I5ZAvdhiYJ
">West Indies needed 73 runs from the last six overs against India #OnThisDay in 2016, in order to secure a spot in the #T20WorldCup final.
— ICC (@ICC) March 31, 2020
🎥 Watch how @Russell12A and @54simmo finished it with two balls to spare 👇 pic.twitter.com/I5ZAvdhiYJWest Indies needed 73 runs from the last six overs against India #OnThisDay in 2016, in order to secure a spot in the #T20WorldCup final.
— ICC (@ICC) March 31, 2020
🎥 Watch how @Russell12A and @54simmo finished it with two balls to spare 👇 pic.twitter.com/I5ZAvdhiYJ
இதையும் படிங்க:குழந்தைகளுடன் உடற்பயிற்சியைத் தொடங்கிய ஃபீல்டிங் ஜாம்பவான்!