நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியாகவும் இது அமைந்துள்ளது.
தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 0.82 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 0.75 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 0.60 புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாமிடத்திலும், 0.50 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும் உள்ளது.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிகெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வெல்லும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:’ஸ்டார்க் குறித்து கவலைப்படத் தேவையில்லை’ - ஆரோன் ஃபின்ச்