#VijayHazare : இந்தியாவில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, ரயில்வே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரயில்வே அணி பாபா அபராஜித்தின் பந்துவீச்சில் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் மூலம் ரயில்வே அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 200 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, மனிஷ் ராவ் 55, பிரதாம் சிங் 43 ரன்களை அடித்தனர். தமிழ்நாடு அணி சார்பில் பாபா அபராஜித் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 201 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய், அபினவ் முகுந்த் ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய பாபா அபராஜித், விஜய் சங்கர் இணை, ரயில்வே அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தது.
பந்துவீச்சில் தனது ஆக்ரோசத்தைக் காட்டிய அபராஜித் பேட்டிங்கிலும் தனது ருத்ர தாண்டவத்தைத் தொடர்ந்தார்.
அதிரடியாக விளையாடிய அபராஜித் சதமடித்தும் அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் தனது பங்கிற்கு அரை சதமடித்தார்.
இறுதியில், தமிழ்நாடு அணி 44.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 203 ரன்களை எடுத்து ரயில்வே அணியை வீழ்த்தியது. தமிழ்நாடு அணி சார்பில் பாபா அபராஜித் 111 ரன்களையும், விஜய்சங்கர் 72 ரன்களை விளாசினர்.
-
Win sealed in style with a hit to the fence!
— TNCA (@TNCACricket) October 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Aparajith remains unbeaten on 111, Vijay Shankar scores 72* as TN registers its 7th victory on the trot in #VijayHazareTrophy2019!
SCORECARD▶️ https://t.co/7s8lUI1isg#VijayHazare #RLWvTN pic.twitter.com/V6XLDc1gXL
">Win sealed in style with a hit to the fence!
— TNCA (@TNCACricket) October 9, 2019
Aparajith remains unbeaten on 111, Vijay Shankar scores 72* as TN registers its 7th victory on the trot in #VijayHazareTrophy2019!
SCORECARD▶️ https://t.co/7s8lUI1isg#VijayHazare #RLWvTN pic.twitter.com/V6XLDc1gXLWin sealed in style with a hit to the fence!
— TNCA (@TNCACricket) October 9, 2019
Aparajith remains unbeaten on 111, Vijay Shankar scores 72* as TN registers its 7th victory on the trot in #VijayHazareTrophy2019!
SCORECARD▶️ https://t.co/7s8lUI1isg#VijayHazare #RLWvTN pic.twitter.com/V6XLDc1gXL
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி இந்தத் தொடரில் தொடர்ச்சியாக தனது ஏழாவது வெற்றியைப் பதிவு செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணியின் பாபா அபராஜித் பேட்டிங்கில் 111 ரன்களையும், பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளையும் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க:#VijayHazare: 'நம்ம புள்ளீங்கோ எல்லாம் பயங்கரம்' - வெறித்தனம் காட்டும் தமிழ்நாடு அணி!