விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்றது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்றிருந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு, கர்நாடக அணிகள் தகுதி பெற்றன. இந்தத் தொடர் முழுவதிலும் ஒரு தோல்வியை கூட சந்திக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இதனிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் ரன் ஏதுமின்றி மிதுன் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து அஸ்வினும் எட்டு ரன்னில் நடையைக் கட்டியதால் தமிழ்நாடு அணி 24 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த அபினவ் முகுந்த் - பாபா அப்ரஜித் இணை பொறுமையாகவும் அதே சமயத்தில் ரன்களையும் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் அபினவ் முகுந்த் 85 ரன்களில் (110 பந்துகள், 9 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த விஜய் சங்கர் வழக்கமான பாணியில் விளையாடத் தொடங்கினார். அப்போது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பாபா அப்ரஜித் 66 ரன்களில் துரதிருஷ்டவசமாக ரன்-அவுட்டானார். அடுத்த வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து விஜய் சங்கர் 38, வாஷிங்டன் சுந்தர் 2 என அடுத்தடுத்து வெளியேறினர். இறுதிக்கட்டத்தில் சற்று சிறப்பாக ஆடிய ஷாருக்கான் மிதுன் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளிலும் முகமது 10, முருகன் அஸ்வின் 0 ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றிய மிதுன் ஹாட்ரிக் சாதனைப் படைத்தார்.
இதனால் தமிழ்நாடு அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடக பந்துவீச்சில் அபிமன்யு மிதுன் 5 விக்கெட்டுகளையும், கவுசிக் 2, பிரதீக் ஜெயின், கவுதம் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து களமிறங்கிய கர்நாடக அணி அதிரடியான தொடக்கத்துடன் சேஸிங்கை ஆரம்பித்தது. அந்த வேளையில் தேவ்தத் பட்டேல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் அதன்பின்பு கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த மயாங்க் அகர்வால் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
-
Winners in 2017-18 🔥
— BCCI Domestic (@BCCIdomestic) October 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Winners in 2019-20 🔥
Karnataka Lift Fourth #VijayHazare Trophy 🏆🏆🏆🏆#KARvTN @Paytm pic.twitter.com/iu2NEB1CAj
">Winners in 2017-18 🔥
— BCCI Domestic (@BCCIdomestic) October 25, 2019
Winners in 2019-20 🔥
Karnataka Lift Fourth #VijayHazare Trophy 🏆🏆🏆🏆#KARvTN @Paytm pic.twitter.com/iu2NEB1CAjWinners in 2017-18 🔥
— BCCI Domestic (@BCCIdomestic) October 25, 2019
Winners in 2019-20 🔥
Karnataka Lift Fourth #VijayHazare Trophy 🏆🏆🏆🏆#KARvTN @Paytm pic.twitter.com/iu2NEB1CAj
அப்போது கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்திருந்தது. ராகுல் 52 ரன்களுடனும் மயாங்க் அகர்வால் 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எனினும் தொடர்ந்து மழை பெய்ததால் விஜெடி முறைப்படி கர்நாடக அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நடப்பு தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கர்நாடக அணி விஜய் ஹசாரே கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளது.
இந்தாண்டு விஜய் ஹசாரே தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத தமிழ்நாட்டின் வெற்றியைத் தடுத்த மழையால் தமிழ்நாடு அணியின் சாம்பியன் கனவும் தகர்ந்தது.