வங்கதேசம்-ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்பின் களமிறங்கிய ஆப்கான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பஸ், ஹஸ்ரத்துல்லா ஜசாய் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய ஜசாய் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஆஸ்கர் ஆப்கான் ரன் எடுக்காமலும் சட்ரான் 14 ரன்களுடனும் முகமது நபி 4 ரன்களிலும் நடையைக்கட்டினர். மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில் ஆப்கான் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி சார்பில் அஃபிப் ஹொசைன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
139 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 4 ரன்களிலும் நஜ்முல் ஹொசைன் 5 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அதன்பின் களமிறங்கிய அந்த அணியின் ’உலகக்கோப்பை நாயகன்’ கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன் தனி ஒருவனாக அணியை வழிநடத்திச் சென்றார்.
மறுமுனையில் வங்கதேச வீரர்கள் தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வந்த நிலையில் ஷாகிப் நிலைத்து ஆடி அரைசதமடித்தார். இதன்மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் தனது ஒன்பதாவது அரைசதத்தை பதிவுசெய்தார். இறுதியில் வங்கதேச அணி 19 ஓவர்களில் 139 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: #Bangladesh Tri Series2019: வங்கதேசத்தை பதம்பார்த்த ஆப்கான்!
ஷாக் அளித்து சாதனை படைத்த ஷாகிப்
- இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 70 ரன்களை விளாசி அணியை வெற்றிபெறச் செய்த அந்த அணியின் கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
-
Shakib Al Hasan with the bat today:
— ICC (@ICC) September 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
7️⃣0️⃣ runs
8️⃣ fours
1️⃣ six
The rest of Bangladesh's batsmen:
6️⃣3️⃣ runs
1️⃣ four
1️⃣ six
He's now Bangladesh's leading T20I runscorer, and also became the first man from his country to take 350 T20 wickets.
What a player!#BANvAFG pic.twitter.com/HaQ1rHmDuF
">Shakib Al Hasan with the bat today:
— ICC (@ICC) September 21, 2019
7️⃣0️⃣ runs
8️⃣ fours
1️⃣ six
The rest of Bangladesh's batsmen:
6️⃣3️⃣ runs
1️⃣ four
1️⃣ six
He's now Bangladesh's leading T20I runscorer, and also became the first man from his country to take 350 T20 wickets.
What a player!#BANvAFG pic.twitter.com/HaQ1rHmDuFShakib Al Hasan with the bat today:
— ICC (@ICC) September 21, 2019
7️⃣0️⃣ runs
8️⃣ fours
1️⃣ six
The rest of Bangladesh's batsmen:
6️⃣3️⃣ runs
1️⃣ four
1️⃣ six
He's now Bangladesh's leading T20I runscorer, and also became the first man from his country to take 350 T20 wickets.
What a player!#BANvAFG pic.twitter.com/HaQ1rHmDuF
-
- ஷாகிப்-அல்-ஹசன், முகமது நபியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அந்த அணியில் 350 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனையையும் படைத்தார்.
- மேலும் டி20 போட்டிகளில் இவர் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வங்கதேசத்தை விருட்சமாக்கப்போகும் ஷகிப் என்னும் விதை!